பேஸ்புக் லைக் பாக்ஸ் (Facebook Like Box) உருவாக்குவதும் இணைப்பதும் எப்படி...?

Written By kesa on Monday, December 23, 2013 | 2:36 AM


கடந்த பதிவில் Facebook Fan Page எனும் ரசிகர் பக்கத்தை உருவாக்குவது எப்படி...? என்று பார்த்தோம். அப்படி நாம் உருவாக்கிய ரசிகர் பக்கத்தை நமது வாசகர்கள் Like செய்ய வசதியாக நமது தளத்தில் Like Box Gadget-ஐ  வைப்பது எப்படி...? என்று பார்ப்போம். 

1. முதலில் https://developers.facebook.com/docs/plugins/like-box-for-pages என்ற முகவரிக்கு சென்று உங்கள் பேஸ்புக் கணக்கை கொண்டு உள்நுழையவும்.
2. Facebook Page URL என்ற இடத்தில் உங்கள் facebook Fan Page-ன் முகவரியை கொடுத்து Enter கீயை அழுத்தவும்.
உதாரணத்திற்கு https://www.facebook.com/Antonavistricks
நீங்கள் Enter கீயை அழுத்தியவுடன் உங்கள் Fan Page-இன் Like Box தோற்றமளிக்கும். அவற்றில் நீங்கள் விரும்பினால் சில மாற்றங்கள் செய்யலாம். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
படத்தில் உள்ளவை:

1. Facebook Page URL உங்கள் Facebook Fan Page-இன் முகவரி
2. Width - Like Box-இன் அகலத்தை உங்கள் sidebar-கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
3. Height - Like Box-இன் உயரத்தை உங்களுக்கு விருப்பமானவாறு மாற்றிக் கொள்ளலாம்.

4. Color Scheme - Like Box-ன் பின்னணி நிறம்(Background Color). Dark, Light இரண்டில் ஒன்றை உங்கள் டெம்ப்ளேட் கலரை பொறுத்து தேர்ந்தெடுக்கவும்.
5. Show Friends' Faces - நமது பக்கத்தை லைக் செய்தவர்களின் புகைப்படங்கள் தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.
Show Posts - நமது பக்கத்தின் பதிவுகள்(Posts) தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனையும் வெறுமனே விட்டுவிடுங்கள்.
7. Show Header - Box-ன் மேலே "Find us on Facebook" என்னும் தலைப்பு. அது தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.

8. Show Border - Box-இற்கு Border வேண்டுமெனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.
மேற்சொன்ன மாற்றங்களை செய்தபின் Get Code என்பதை Click செய்யவும்.
Click செய்தவுடன் ஒரு விண்டோ Open ஆகி உங்கள் Like Box-இற்கான Code-ஐ காட்டும். அதில் IFRAME பகுதியில் உள்ள  Code-ஐ Copy செய்துக் கொள்ளுங்கள்.

Like Box-ஐ பிளாக்கரில் இணைக்க:
1. Blogger Dashboard => Layout => பக்கத்திற்கு செல்லவும்.
2. Add a Gadget என்பதை க்ளிக் செய்து, Html/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.
3. அங்கு தலைப்பு ஏதாவது கொடுத்துவிட்டு, Content பகுதியில் நீங்கள் Copy செய்த Like Box-ன் Code-ஐ Past செய்யவும்.
4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.
அவ்வளவுதான்...! உங்கள் தளத்தில் Like Box இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்

0 comments:

Post a Comment