கடந்த பதிவில் Facebook Fan Page எனும் ரசிகர் பக்கத்தை உருவாக்குவது எப்படி...? என்று பார்த்தோம். அப்படி நாம் உருவாக்கிய ரசிகர் பக்கத்தை நமது வாசகர்கள் Like செய்ய வசதியாக நமது தளத்தில் Like Box Gadget-ஐ வைப்பது எப்படி...? என்று பார்ப்போம்.
1. முதலில் https://developers.facebook.com/docs/plugins/like-box-for-pages என்ற முகவரிக்கு சென்று உங்கள் பேஸ்புக் கணக்கை கொண்டு உள்நுழையவும்.
2. Facebook Page URL என்ற இடத்தில் உங்கள் facebook Fan Page-ன் முகவரியை கொடுத்து Enter கீயை அழுத்தவும்.
உதாரணத்திற்கு https://www.facebook.com/Antonavistricks
நீங்கள் Enter கீயை அழுத்தியவுடன் உங்கள் Fan Page-இன் Like Box தோற்றமளிக்கும். அவற்றில் நீங்கள் விரும்பினால் சில மாற்றங்கள் செய்யலாம். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
படத்தில் உள்ளவை:
1. Facebook Page URL - உங்கள் Facebook Fan Page-இன் முகவரி
2. Width - Like Box-இன் அகலத்தை உங்கள் sidebar-கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
3. Height - Like Box-இன் உயரத்தை உங்களுக்கு விருப்பமானவாறு மாற்றிக் கொள்ளலாம்.
4. Color Scheme - Like Box-ன் பின்னணி நிறம்(Background Color). Dark, Light இரண்டில் ஒன்றை உங்கள் டெம்ப்ளேட் கலரை பொறுத்து தேர்ந்தெடுக்கவும்.
5. Show Friends' Faces - நமது பக்கத்தை லைக் செய்தவர்களின் புகைப்படங்கள் தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.
Show Posts - நமது பக்கத்தின் பதிவுகள்(Posts) தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனையும் வெறுமனே விட்டுவிடுங்கள்.
7. Show Header - Box-ன் மேலே "Find us on Facebook" என்னும் தலைப்பு. அது தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.
8. Show Border - Box-இற்கு Border வேண்டுமெனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.
மேற்சொன்ன மாற்றங்களை செய்தபின் Get Code என்பதை Click செய்யவும்.
Click செய்தவுடன் ஒரு விண்டோ Open ஆகி உங்கள் Like Box-இற்கான Code-ஐ காட்டும். அதில் IFRAME பகுதியில் உள்ள Code-ஐ Copy செய்துக் கொள்ளுங்கள்.
Like Box-ஐ பிளாக்கரில் இணைக்க:
1. Blogger Dashboard => Layout => பக்கத்திற்கு செல்லவும்.
2. Add a Gadget என்பதை க்ளிக் செய்து, Html/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.
3. அங்கு தலைப்பு ஏதாவது கொடுத்துவிட்டு, Content பகுதியில் நீங்கள் Copy செய்த Like Box-ன் Code-ஐ Past செய்யவும்.
4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.
அவ்வளவுதான்...! உங்கள் தளத்தில் Like Box இணைக்கப்பட்டிருக்கும்.
0 comments:
Post a Comment