உங்கள் அழகிய Android சாதனத்துக்கு மேலும் அழகு சேர்க்க உதவும் அழகிய ஆறு Icon Packs இலவசமாக

Written By NIsha on Sunday, June 8, 2014 | 6:54 PM

உங்கள் Android சாதனத்தை வாரத்தில் எழு நாட்களும் ஒரே தோற்றத்தில் பார்த்து அலுப்படைந்து விட்டீர்களா?

இனி வேண்டாம் அந்த அலுப்பு, உங்கள் Android சாதனத்தை அழகானதாகவும் பயனுள்ளதாகவும் அமைத்திட Launcher மென்பொருள்களும் அதற்கான அழகிய Icon Packs உம் உதவுகின்றன. இவற்றினை பயன்படுத்தி உங்கள் Android சாதனத்துக்கு புத்தம் புதிய தோற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

அந்த வகையில் உங்கள் Android சாதனத்துக்கான சிறந்த Launcher மென்பொருள்களை நாம் ஏற்கனவே எமது முகநூல் பக்கத்தில் அறிமுகப்படுத்தி இருந்தோம் அல்லவா?

இனி அவற்றினூடாக பின்வரும் அழகிய Icon களை உங்கள் Android சாதனத்துக்கு இட்டு மேலும் அழகுபடுத்திடலாம்.


Belle UI 


அந்தவகையில் என்னையும் சேர்த்து அதிகமான Android பயனர்களை கவர்ந்த 1000 க்கும் மேற்பட்ட அழகிய Icon களை தன்னகமாக கொண்டதுவே Belle UI எனும் Icon Pack ஆகும். இது கையடக்க தொலைபேசிகளுக்கான முன்னாள் ஜாம்பவான் Nokia இன் Nokia Belle எனும் இயங்குதளத்தில் இருக்கும் Icon களை ஒத்து காணப்படுகின்றது.




Voxel - Icon Pack




600 இற்கும் மேற்பட்ட அழகிய Icon  களை இது தன்னகமாக கொண்டுள்ளதுடன் அவற்றுக்கு ஏற்ற 11 HD Wallpaper களையும் கொண்டுள்ளது.




Moonshine



உச்ச தெளிவுத்திறனில் அமைந்த 200 க்கும் மேற்பட்ட Icon களை இது தன்னகமாக கொண்டுள்ளதுடன் அவற்றுக்கு ஏற்ற 12 wallpaper களையும் கொண்டுள்ளது.




Yoma



இது கிட்டத்தட்ட Voxel  போன்ற தோற்றத்தை கொண்டிருந்தாலும் இதில் 1000 இற்கும் மேற்பட்ட Icon கள் தரப்பட்டுள்ளது. அவைகள் ஒவ்வொன்றும் மிகத்துல்லியமான சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கு ஏற்ற HD Wallpaper களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.





Metrosphere


இதில் தரப்பட்டுள்ள Icon கள் Windows Phone இல் உள்ள Icon களை ஒத்து காணப்படுகின்றது. தட்டையான சதுர வடிவத்தில் அமைந்துள்ள Icon களை தன்னகமாக கொண்டுள்ள இது 500 க்கும் மேற்பட்ட Icon களுடன் 9 Wallpaper களை கொண்டுள்ளது.





Bleach



1215 Icon களையும்  அவற்றுக்கு ஏற்ற 9 பின்புலப் படங்களையும் தன்னகமாக கொண்டமைந்துள்ள இதுவும் உங்கள் Android சாதனத்தை அலங்கரிக்க சளைத்ததல்ல.




மேற் கூறியவைகள் அனைத்தையும் Google Play Store இல் இருந்து இலவசமாகவே தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இவைகளை தரவிறக்கிய பின் அவற்றினை பயன்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் மூன்றாம் நபர் Launcher மென்பொருளொன்றை நிறுவி இருக்க வேண்டும்.

அந்தவகையில் நாம் ஏற்கனவே எமது முகநூல் பக்கத்தில் அறிமுகப்படுத்திய Aviate Launcher, Nova Launcher, Go Launcher போன்றவைகள் உங்கள் Android சாதனத்துக்கு அழகிய தோற்றத்தையும் சிறந்த வசதிகளையும் தருகின்றது நீங்கள் அவற்றில் ஒன்றை தரவிறக்க விரும்பினால் பின்வரும் எமது முகநூல் பதிவை பார்க்க.

Nova Launcher:





Go Launcher:






நீங்கள் Nova Launcher மென்பொருளை பயன்படுத்துபவர் எனின் Nova Settings என்பதற்கு சென்று Look And Feel என்பதை சுட்டி அதில் Icon Theme என்பதை சுட்டுக.

இனி நீங்கள் தரவிறக்கி நிறுவிய Icon Packs அனைத்தும் பட்டியல் படுத்தப்படும் பின் உங்களுக்கு தேவையானவற்றை தெரிவு செய்து கொள்க.


நீங்கள் GO Launcher மென்பொருளை பயன்படுத்துபவர் எனின் Home Screen இல் இருந்தவாறு Menu Button ஐ சுட்டி Preferences என்பதை சுட்டுக இனி தோன்றும்  Preferences பகுதியில் உள்ள Icon என்பதன் மூலம் நீங்கள் விரும்பிய Icon ஐ இட்டுக்கொள்ளலாம்.

நீங்கள் பயன்படுத்துவது Aviate Launcher எனின் Setting பகுதிக்கு சென்று Icon Packs என்பதனை சுட்டுவதன் மூலம் நீங்கள் விரும்பும் Icon Pack இனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

0 comments:

Post a Comment