பேஸ்புக்கில் உங்களுக்கென ஒரு ரசிகர் பக்கத்தை (Facebook Fan Page) உருவாக்குவது எப்படி...?

Written By kesa on Monday, December 23, 2013 | 2:37 AM





பேஸ்புக்கில் தனக்கென ஒரு ரசிகர் பக்கத்தை(Facebook Fan Page) உருவாக்க எல்லா பேஸ்புக் பயனர்களுக்கும் ஆசை வருவது தவிர்க்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், பலருக்கு அதை எப்படி உருவாக்குவது என்பதுதான் பிரச்சினை. உருவாக்க தெரியாதவர்கள் அறிந்து கொள்வதற்கே இந்தப் பதிவு.

இப்போது விடயத்திற்கு வருவோம். 

1. முதலில் உங்கள் Facebook கணக்கைக் கொண்டு உள்நுழையுங்கள்.
2. பிறகு https://www.facebook.com/pages/create.php என்ற முகவரிக்கு செல்லுங்கள்.

3. அங்கு ஆறு விதமான Options இருக்கும். அதில் நீங்கள் எந்த நோக்கத்திற்காக Fan Page உருவாக்க நினைக்கிறீர்களோ அதற்கு பொருத்தமான ஒரு Option-ஐ தேர்ந்தெடுக்கவும்.
4. பிறகு வரும் Drop Down Box-ல் பொருத்தமான பிரிவை (Category) தேர்வு செய்து, கீழே உங்கள் ரசிகர் பக்கத்திற்கான பெயரையும் டைப் செய்து, பின் "I agree to Facebook Pages terms" என்பதில் Check செய்து  "Get Started" என்பதை க்ளிக் செய்யவும்.
5. பிறகு உங்கள் Fan Page பற்றிய அடிப்படை தகவல்கள் கேட்கப்படும். அவற்றை கொடுத்து விட்டு Save செய்யுங்கள். அதன் பின்னர் உங்கள் Fan Page-இன் Dashboard பக்கம் வரும். இனி நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம். 
நாம் உருவாக்கிய பேஸ்புக் பக்கத்தின் முகவரியை அறிய:

Fan Page-இன் Dashboard-இல் உள்ள Admin Panel-இல் வலது பக்க மேல் மூலையில் உள்ள Edit Page 
என்பதை click செய்யுங்கள். பின்னர் தோற்றமளிக்கும் window-இன் வலது பக்க மேல் மூலையில் 
உள்ள View Page என்பதை click செய்யுங்கள்.உங்கள் பக்கம் வந்துவிடும். அங்கு Address Bar-ல் இருக்கும் முகவரி தான் உங்கள் ரசிகர் பக்கத்தின் முகவரியாகும். 
குறிப்பு: இந்த முகவரி நீளமாக இருக்கும். உங்கள் Fan Page 25 விருப்பங்களை கடந்தபின் இந்த முகவரியை உங்க விருப்பம் போல் அமைத்துக் கொள்ளலாம். அதை மாற்ற Edit Page
சென்று Update Page Info என்பதில் உள்ள Facebook Web Address என்ற இடத்தில் விரும்பிய பெயரை டைப் செய்து save செய்யுங்கள். 

எடுத்து காட்டாக : https://www.facebook.com/yarlnatham


இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்

0 comments:

Post a Comment