ஆண்ட்ராய்ட், ஆப்பிள் போன்களில் தமிழில் டைப் செய்ய

Written By Unknown on Thursday, December 19, 2013 | 8:43 PM

ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களில் தமிழில் டைப் செய்ய புதிய மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது. 

செல்லினம் என பெயரிடப்பட்ட இந்த மென்பொருள் தற்பொழுது கூகிள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த கிடைக்கிறது. 





செல்லினம்: 


ஸ்மார்ட்போன்களில் தமிழில் டைப் செய்ய பயன்படும் ஒரு மென்பொருளாகும். இதை மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன் என்பவர் உருவாக்கினார். சிலமாதங்களுக்கும் இலவசமாக வெளியிடப்பட்ட இந்த மென்பொருளானது, பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. பயனர்கள் தங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் கொடுத்த மென்பொருளைப்பற்றிய கருத்துகளின் அடிப்படையில் தற்பொழுது இம்மென்பொருள் மேன்படுத்தபடுத்தப்பது செல்லினம் 2 என்ற புதிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. 

இம்மென்பொருளை உங்கள் ஸ்மார்ட்போன்களில் நீங்கள் பயன்படுத்த விரும்பினால் தரவிறக்கம் செய்துகொள்ள செல்ல வேண்டிய முகவரி: 

https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam

செல்லினம் மென்பொருளில் உள்ள சிறப்புகள்: 



இம்மென்பொருளில் மற்ற தமிழ் மென்பொருளில் ஏற்படும் சொற்பிழைகள் ஏற்படுவதில்லை. ஒரு தமிழ் வார்த்தை தவறாக எழுத்துப் பிழையுடன் தட்டசிட்டாலும், தானாகவே திருத்தி அமைத்து விடும். இம்மென்பொருளின் மிக முக்கியமான சிறப்பாக இதைக் கூறலாம். 


சாதாரணமாக மொபைல் போனில் உள்ள கீபோர்டில் எண்களை உள்ளிட 123 என்ற விசையைகளைத் தட்டி, பிறகு கிடைக்கும் குறியீடுகள் மற்றும் எண்களுக்கான குறியீடுகளை போர்டில் தேர்ந்தெடுத்து உள்ளீடு செய்யும் வழிமுறையே உள்ளது. 

ஆனால் புதிய செல்லினம் பதிப்பில் அவ்வாறில்லை. முதல் வரிசையில் உள்ள விசைகளை தொடர்ந்து அழித்தினாலே எண்களை உள்ளிடும் வசதி தோன்றும்.


ஒரு சொல்லை தட்டச்சிடும்பொழுது, தானாகவே இந்த சொல்தானா என்பதை காட்டும் வசதிகள் ஆங்கிலத்தில் உண்டு. அதுபோல செல்லினம் மென்பொருளில் உண்டு. நீங்கள் தட்டச்சிடும் எழுத்துக்களை உணர்ந்துகொண்டு கூகிள் இன்புட் டூலில் உள்ளதைப் போன்று அந்த வார்த்தைகளை வரிசைப்படுத்திக் காட்டும். 

செல்லினம் மென்பொருள் மூலம் தட்டச்சிடும்பொழுது தோன்றும் கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தினால் சொற்களுக்கான பட்டியல் விரித்துக் காட்டப்படும். தேவையான வார்த்தையை அதிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். 


சொல் திருத்தியுடன் கூடிய முதல் தமிழ் மென்பொருள் இதுவாகும். இம்மென்பொருளை பிரபல செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களான HTC, APPLE தங்களுடைய ஸ்மார்ட்போன் சாதனங்களில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து வழங்குகின்றன. 

வெளியான சில மாதங்களிலேயே இம்மென்பொருள் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதை உணர்ந்து மற்ற ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களும் இம்மென்பொருளை தங்களுடைய தயாரிப்புகளில் இணைத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

ஒரு லட்சத்திற்கும் மேலானோர்கள் தற்பொழுது இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். 

மிக அற்புதமான தமிழ் உள்ளீடு மென்பொருளான செல்லினத்தை வழங்கிய மலேசிய வாழ் தமிழர் திரு. முத்து நெடுமாறன் அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம். .

செல்லினம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய : Download Free Tamil input Software Sellinam 2

எவ்வாறு Download செய்வது?

1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP AD என்பதை க்ளிக் பண்ணவும்.

**************************






நன்றி நண்பர்களே..!!
http://adfoc.us/19339036141690இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்
                                                                                             
நன்றி. 

0 comments:

Post a Comment