Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?

Written By kesa on Wednesday, December 25, 2013 | 10:16 AM

நம் எல்லோரிடமும் பென் ட்ரைவ் (pen-drive) வும் அதில் சில வைரஸ் (virus)சும் காணப்படுவது வழக்கமே. எனவே நம் கணணிகளுக்கு வைரஸ் உட்புகாமலிருக்க ஒவ்வொருவரும் சில வழிகளை தேடிக்கொண்டிருப்போம். இவ்வகையில் உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.infஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இது வின்டோஸ் ( windows ) இயங்குதளங்களிலேயே பரவலாக தாக்குகின்றது. எனவே இவ் ஒடோரன் வைரஸ் நம் கணணியை பாதுகாப்பது எப்படி?



நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்கள் பென் ட்ரைவரில் வைரஸ் உள்ளது என உணருவீராயின் சிறந்த அன்டி வைரஸ்(anti-virus) ஒன்றை நிறுவுங்கள் , அதுவும் எந்நாளும் update செய்து கொள்ளக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும், இவ்வரானஅன்டி வைரஸ்கள் பலவும் இலவசமாக கிடைக்கின்றது. ஆயினும்  Microsoft  நிறுவனத்தின் Microsoft Essentials மிகச்சிறந்த இலவச அன்டி வைரஸ் ஆகும். இது விரைவானதும், சிறிய அளவிலான memory  யே தேவைப்படுகிறது, இது licensed வின்டோஸ்இயங்குதளங்களிலேயே பயன்படுத்த முடியும். இதை பயன்படுத்திப் பாருங்கள் "சிறந்த ஒரு அன்டி வைரஸ்" நீங்களே உணர்வீர்கள்......

MICROSOFT ESSENTIALS தரவிறக்க இங்கே சொடுக்குங்கள்

தலைப்பிற்கும் தகவலுக்கும் சம்பந்தமே இல்லையே என யோசிக்கிரீங்களா? இப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.

01. Run command ஐ (Ctrl + R)  திறந்து gpedit.msc என டைப் செய்து okபட்டனை அழுத்துங்கள்.
02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templatesகீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்
03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.

04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay  என்பதற்கு கீழுள்ளEnabled 
        என்பதையும்  Turnoff Autoplay on இல் All drives தெரிவுசெய்யுங்கள்

05. இப்பொழுு நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும்  வரை அது திறக்காது.

வைரஸ் தாக்கிய பென் ட்ரைவ் ஒன்றை திறப்பது எப்படி?

எப்பொழுதும் பென் ட்ரைவ்வை double கிலிக் செய்து திறக்காதீர்கள். இங்கு ஒரு இலகுவான வழியொன்றை தருகிறேன்.
01. Run command ஐ (Ctrl + R)  திறந்து drive வின் எழுத்தை  கீழுள்ள படத்தில்  காட்டப்பட்டுள்ளவாறு டைப் செய்து  ok பட்டனை அழுத்துங்கள்.


இவ்வாறு open செய்யிம்போது வைரஸ் நம் கணணிக்குள் உட்புகாது. இப்போது பென்டரைவரில் உங்களுக்கு தேவையானவற்றை செயற்படுத்தலாம். 



நன்றி நண்பர்களே..!!
http://adfoc.us/19339036189259இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்

0 comments:

Post a Comment