சிறந்த ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் 2014

Written By NIsha on Saturday, December 7, 2013 | 8:29 AM





 2014 ஆண்டுக்குரிய ஆன்டி வைரஸ்களில் சிறந்த சில வைரஸ் புரோகிராம்கள்  கணினி  வைத்திருப்பவர்களுக்கு பெரும் பிரச்சானையாக இருப்பது இந்த வைரஸ் தொல்லை தான். இதனால் எதிர்பாராமல் நமது முக்கிய மான வேலைகள் பாதிக்கப்பட்டு விடும். சில நேரங்களில் இதை சரி செய்ய மணிக்கணக்கில் போராட வேண்டியிருக்கும்.

இணையதள பயன்பாடு உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை அடிக்கடி ஏற்படும். இதை சமாளித்து சரி செய்வதற்குதான் ஆன்டி வைரஸ் (Anti Virus) மென்பொருட்கள் உதவுகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்  ஆனால்  அவற்றில சிறந்தது  எது என்பது பற்றியே இந்த பதிவு

Avast:
மிகச்சிறந்த விண்டோஸ்  ஆண்ட்டிவைரஸ் புரோகிராம்களில் இதுவும் ஒன்று. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது
தரவிறக  சுட்டி 
AVG:
அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி.விண்டோஸ்  சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும். இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வேர் தொகுப்புகள் ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்குகிறது. பாதுகாப்பில்லாத, சந்தேகத்திற்கு இடமான கோப்புகளை தடுத்து நிறுத்துகிறது. தகவல்கள் திருடப்படும் முயற்சிகளை முறியடிக்கிறது.

தரவிறக  சுட்டி


Kaspersky Antivirus:
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென முதலில் வெளி வந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் இந்த புரோகிராம் ட்ரோஜன் வைரஸ், கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கான லிங்க் ஆகியவை குறித்து மிகச் சரியாக எச்சரிக்கிறது.
வைரஸ்களை ஸ்கேன் செய்வதில் இதன் அசாத்திய வேகம் குறிப்பிடத்தக்கது.

தரவிறக  சுட்டி 


Avira:
வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்கள் மட்டுமின்றி விளம்பரங்களாக வரும் ஆட்வேர் புரோகிராம்களையும் தடுக்கிறது.
நம் இணையதளச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் முயற்சிகளை முறியடிக்கிறது. தொடர்ந்து பாதுகாப்பு தருவதுடன் தேடலில் நாம் பெறும் இணையதளங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், கண்டறிந்து அறிவிக்கிறது.

தரவிறக  சுட்டி


Microsoft Security Essentials:
விண்டோஸ்  சிஸ்டத்திற்கான வைரசுக்கு எதிரான பாதுகாப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது.
இதனை செயல்படுத்தினால் உங்களது பெர்சனல் கணனியின் செயல்திறன் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் ஆகி விடும்.

தரவிறக  சுட்டி

மற்றும் சில 

0 comments:

Post a Comment