Ravio இனால் அறிமுகப்படுத்தப்பட்ட Angry Birds Star Wars எனும் விளையாட்டை தற்பொழுது facebook இலும் விளையாடலாம்.

Written By NIsha on Monday, December 17, 2012 | 6:26 PM

Angry Birds பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி விளையாடும் இந்த விளையாட்டு, விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் ஓர் உயர்ந்த இடத்தினைப்பிடித்துள்ளது.

Angry Birds Star Wars on facebook
 
ஆரம்பத்தில் இதனை Ravio நிறுவனம் iOS சாதனங்களுக்காக 2009 இல் அறிமுகம் செய்தது. பின் படிப்படியாக வளர ஆரம்பித்து 2012 இன் ஆரம்பப்பகுதியில் (FEBRUARY) Angry Birds Friends என்ற பெயரில் Facebook இல் ஒரு விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. AppData இன் கணிப்பின்படி இது மாதமொன்றிற்கு மட்டும் 1.7 மில்லியன் பயனாளர்களால் விளையாடப்படுகின்றது.

மேலும் Ravio இனால்  Angry Birds Star Wars எனும் புதிய விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது நாம் அணைவரும் அறிந்ததே. நேற்று திங்கட்கிழமை (17/12/1012) இதனை facebook இல் அறிமுகம் செய்துள்ளது.

Angry Birds Star Wars facebook application

இதனை விளையாட கீழுள்ள இணைப்பில் சென்று Play Game என்பதனை சுட்டவும்.



0 comments:

Post a Comment