நீண்ட நாட்கள் தரவுகளை சேமிக்க

Written By Unknown on Wednesday, December 18, 2013 | 12:01 AM

வணக்கம் நண்பர்களே..!

இன்று தரவுகளை சேமித்து வைக்க நாம் பல்வேறு சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக Memory Card, USB என்று சொல்லக்கூடிய Pendrive, குறுவட்டு(DVD), நெகிழி (CD) போன்றவைகளைக் கூறலாம்.

இவற்றில் மெமரி கார்ட், USB போன்றவற்றை  பெரும்பாலும் தற்காலிகமாக தரவுகளை சேமிக்க மட்டுமே பயன்படுத்துவோம்.

நீண்ட நாட்கள் பயன்படுத்தும் வகையில் நிரந்தரமாக தரவுகளை சேமித்து வைக்கப் பயன்படுத்துவது CD, DVD போன்றவைகளே.


இவற்றில் நீண்ட நாட்கள் தகவல்களை சேமித்துப் பயன்படுத்துவதற்கு CD-R /+R அல்லது DVD-R/+R போன்ற சேமிப்பு வட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். ரீரைட்டபிள் (RW ) CD என்று சொல்லக்கூடியவைகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

நீங்கள் தரவுகளை சேமித்து வட்டுக்களை அவற்றிற்குண்டான உறைகளில் வைத்து பாதுகாத்திட வேண்டும். தரவுகளை சேமித்த வட்டுகளில் உள்ள அடிப்பகுதியை குப்பை, தூசிகள், படியாதவாறு மெலிதான பருத்தி அல்லது மிருதுவான பட்டுத் துனியைப் பயன்படுத்தி லேசாக துடைத்து சுத்தம் செய்யலாம்.

எப்பொழுதும் ஒரு தரவை இரண்டு CDக்களில் நகல்களாக எடுத்து வைப்பது சிறந்தது. ஒரு வட்டில் உள்ள தகவல்கள் பாதிப்பு ஏற்பட்டால் கூட மற்ற சிடியிலிருந்து தகவல்களை நாம் மீட்டெடுக்கலாம்.

வட்டுகளின் கொள்ளளவும், திறனையும் குறிக்கும் சொற்கள்:

Gold - என்று குறிப்பிட்ட வட்டுகளை சுமாராக 300 வருடங்கள் வரை பாதுகாத்து வைத்திட முடியும். மிகச்சிறந்த தரமான வட்டு இது. Gold or Silver, Silver என்று குறிப்பிடப்பட்டுள்ள வட்டுக்கள் தரம் குறைந்தவை. எனினும் இவைகள் Reflective Layer களால் உருவாக்கப்பட்டது.

Phathalo Cyanine. இந்த குறுந்தட்டு மிகச்சிறந்த ஒன்று.  AZO, Cyanine போன்றவைகள் சற்று தரத்தில் குறைந்தவை. தகவல்களை, தரவுகளை சேமிக்க  நாம் முறையாக இக்குறுவட்டுகளைப் பற்றி அறிந்து, அதற்கேற்றார்போல் அந்த குறுவட்டுக்களில் தகவல்களை சேமித்துப் பயன்படுத்தவேண்டும்.

தகவல்களின் முக்கியத் தன்மைக்கு ஏற்ப நீங்கள் குறுவட்டுகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்..



நன்றி நண்பர்களே..!!
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்

0 comments:

Post a Comment