Facebook Chat இல் குறிப்பிட்ட சில நண்பர்களிடமிருந்து மட்டும் விலகியிரு(இணைந்திரு)ப்பது எவ்வாறு...?

Written By NIsha on Thursday, December 20, 2012 | 4:33 AM

இன்று ஆளுக்கொரு Mobile Phone என்பதைப்போல் ஆளுக்கொரு Facebook Account எனுமளவுக்கு facebook வளர்ந்து விட்டது.

பெரும்பாலான நண்பர்களை மாதக்கணக்கு வருடக்கணக்கில் காண முடிய விட்டாலும் facebook மூலம் அன்றாடம் சந்திக்கக்கூடியதாய் உள்ளது.
நண்பர்களுக்கிடையில் கருத்துக்களை பரிமாரிக்கொல்வதற்கு facebook பல்வேறு வழிகளை வகுத்திருந்தாலும் Chat செய்வதன் மூலம் உரையாடுவதையே அனைவரும் விரும்புகின்றனர், அத்துடன் இது இலகுவானதும், விரைவானதும் கூட. என்றாலும் முக்கியமான சிலவிடயங்களில் நாம் தீவிரமாக ஈடுபடுகையில் இந்த Chat வசதியானது எரிச்சலூட்டக்கூடிய விதத்தில் அமைவதுமுண்டு. இந்தப்பிரச்சிணைக்கும் facebook இல் தீர்வுள்ளது.

அதாவது நீங்கள் Chat வசதியை Turn off செய்துவிட்டால் நீங்கள் facebook இல் இருப்பதாக உங்கள் நண்பர்களுக்கு காட்டாது இதனால் chat தொல்லையிலிருந்து விடுபடலாம்.
Chat Turn off வசதியினை குறிப்பிட்ட ஒரு நபருக்கும் செயற்படுத்தலாம் அன்றி குறிப்பிட்ட ஒரு நண்பர் தொகுதியிற்கும் செயற்படுத்தலாம். அல்லது அனைத்து நண்பர்களுக்கும் செயற்படுத்தலாம்.

குறிப்பிட்ட ஒரு நபருக்கு மட்டும் Chat Turn off வசதியினை செயற்படுத்துவது அனைவரும் அறிந்ததே அதாவது Chat இலிருந்து விலகியிருக்க வேண்டிய நபரின் Chat Box இல் வலது மூலையில் இருக்கும் Settings icon ஐ click செய்யவரும் Turn off chat for .... என்பதனை சுட்டுவதன் ஊடாக குறிப்பிட்ட ஒரு நண்பர் Chat செய்வதை தவிர்க்கலாம்.

chat turn on facebook for friend


இதுவல்லாமல் குறிப்பிட்ட ஒரு நண்பர் தொகுதியிட்கு Chat Turn off செய்ய வேண்டுமெனில் முதலில் நாம் யாருக்கெல்லாம் Chat Turn off செய்ய விரும்புகின்றோமோ அவர்களை ஒரு  Friend List இல் இணைக்க வேண்டும்.

create friend list on facebook


பின் Chat bar இன் கீழ்பகுதியில் இருக்கும் Settings/Option ஐ  சுட்ட வரும் Advanced Setting இற்கு செல்ல வேண்டும். அப்பொழுது கீழுள்ளதைபோன்று ஒரு Window தோன்றும் அதில் "Turn on chat for all friends except..." என்பதன் கீழுள்ள Box இல் நீங்கள் Create செய்த Friend List ஐ சேர்த்து Save செய்ய வேண்டும். அவ்வளவுதான்.

turn off chat on facebook


இதுவல்லாமல் குறிப்பிட்ட சில நண்பர்களை தவிர ஏனைய நண்பர்களுடன் chat இலிருந்து விலகியிருக்க வேண்டுமெனின் Chat இல் இணைந்திருக்க யாருடன் விரும்புகிறோமோ அவர்களை ஒரு Friend List இல் இணைத்து Chat bar இன் கீழ்பகுதியில் இருக்கும் Settings/Option ஐ  சுட்ட வரும் Advanced Setting Window இல் Turn on chat for only some friends...   என்பதில் Chat இல் இணைந்திருப்பதற்காக Create செய்த Friend List ஐ சேர்த்து Save செய்ய வேண்டும்.

அன்றி Chat இலிருந்து அணைத்து நண்பர்களுடனும் விலகியிருக்க வேண்டுமெனின் Turn off chat என்பதனை சுட்டி Save செய்வதன் மூலம் அணைத்து நண்பர்களுடனும் Chat இலிருந்து விலகியிருக்கலாம்.

எம்மை தொடர்வதன் மூலம் எமது புதிய ஆக்கங்களை உடனுக்குடன் பெறுங்கள். +தகவல் தொழிநுட்பம்





0 comments:

Post a Comment