ஐவாட்ச்

Written By NIsha on Friday, September 16, 2011 | 5:30 AM


ஐவாட்ச் ( http://www.iwatchz.com/ ). ஐ-பாட் நானோ என்பது ஆப்பிள் ஐ-பாட் குடும்பத்தின் ஓர் உறுப்பினர். சதுர வடிவில் இருக்கும் இந்த இசைப் பேழை சாதனத்தில், மிகவும் அடிப்படையான மென்பொருட்கள் சிலவும் உண்டு. உதாரணத்துக்கு, புகைப்படங்களைச் சேமித்துப் பார்க்க முடிகிற வசதி. கடிகார மென்பொருளும் உண்டு. அந்த மென்பொருளை இயக்கினால், ஐ-பாட் நானோ பார்ப்பதற்கே கைக்கடிகாரம்போல் இருக்கும் என்பதைப் பார்த்து அதற்கு strap ஒன்றைச் செய்திருக்கிறது இந்த நிறுவனம். இதை வாங்கி, ஐ-பாட் நானோவை அதில் செருகினால் போதும், கைக்கடிகாரம் தயார்!

இதில் இருக்கும் மற்றொரு மென்பொருள் Pedometer. இதை இயக்கி நடக்க ஆரம்பித்தால், எத்தனை அடிகள் நடந்து இருக்கிறீர்கள் என்பதைக் கணக்கிட்டபடியே வரும். நானோவை கணினியில் இணைத்து உங்களது நடைத் தகவலை www.nikeplus.com என்ற தளத்துக்குப் பதிவேற்றம் செய்து, உங்களது நண்பர்களுடன் 'யார் அதிகம் நடந்தது’ என்று போட்டி போடலாம்..


0 comments:

Post a Comment