டாக்ஸ் வியுவர் - Docx Viewer

Written By NIsha on Tuesday, May 17, 2011 | 12:37 AM

அண்மையில் வேர்ட் 2010 ஆபீஸ் தொகுப்புடன் வந்துள்ள வேர்ட் ப்ராசசர் புரோகிராமில், வழக்கமான வேர்ட் பைல்கள், மாறா நிலையில் Docx என்ற வடிவில் அமைக்கப்படுகின்றன. இதனைப் பழைய வேர்ட் 2003 மற்றும் அதற்கு முந்தைய புரோகிராம்களில் திறந்து படிக்க இயலாது.

இத்தகைய டாகுமெண்ட் களைப் படிக்க முடியாமல் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் நமக்கு இலவசமாகக் கிடைப்பது Docx Viewer. இதன் மூலம் நாம் Docx பார்மட்டில் உள்ள பைல்களை, நம் கம்ப்யூட்டரில் வைத்தே, திறந்து படிக்கலாம். இதற்கு நம் கம்ப்யூட்டரில் வேர்ட் அல்லது வேர்ட் போன்ற புரோகிராமும் தேவையில்லை. இந்த புரோகிராமில் திறந்து படித்த பின்னர், அதனைக் காப்பி செய்து, அப்படியே நாம் பயன்படுத்தக் கூடிய டெக்ஸ்ட் புரோகிராமில், நாம் பயன்படுத்தும் பார்மட்டில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.

Docx Viewer- ஒரு சிறிய, எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய புரோகிராம். இதனைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இந்த புரோகிராமை டவுண்லோட் செய்து, ஸிப் பைலை விரித்து வைத்து இயக்கினால் போதும். உடனே, நமக்கு Docx பார்மட்டில் உள்ள பைலைத் திறப்பதற்கான மெனு கிடைக்கிறது. அதே புரோகிராமில் பார்மட்டில் சேவ் செய்திட முடியாது. அதனைப் படிக்கலாம்; திருத்தலாம் மற்றும் காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு போகலாம். பின்னர் கிளிப் போர்டில் இருப்பதை, டெக்ஸ்ட் ப்ராசசருக்குக் கொண்டு செல்லலாம்.

0 comments:

Post a Comment